சினிமா செய்திகள்

இராமாயணம் விமர்சனம் 4.75/5

அரசன் தசரதன் தன் மனைவிகளில் ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற ராமனுக்கு முடிசூடாமல் பரதனை மன்னனாக முடிசூடும் சூழ்நிலை ஏற்படுகிறது..

இதனை அடுத்து பரதனின் தாய் ராமனை 14 ஆண்டுகள் வனவாசம் இருக்க சொல்கிறார்..

எனவே ராமன் உடன் அவரது மனைவி சீதா மற்றும் ராமனின் சகோதரன் லட்சுமணனும் வனவாசம் செல்கின்றனர்… அவர்கள் அங்கு சந்தித்த இன்னல்கள் என்ன என்பதை உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர்

இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் கதையை திரைக்கதையாக மிக பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் கொடுத்துள்ளனர்..

3டி முறையில் ரசிகர்கள் கண்டு மகிழும் வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி.. ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்..

நடிகர்கள்….

ராமன் கேரக்டரில் ரன்வீர் கபூர்… சீதை கேரக்டரில் சாய் பல்லவி… ராவணன் கேரக்டரில் யஸ் நடித்துள்ளனர்..

இனி ராமனை நினைத்தால் ரன்வீர் கபூர் முகம் நினைவுக்கு வரும் வகையில் அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். சாந்தமாக எல்லாரையும் கவரும் வகையில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சீதை கேரக்டராகவே உருவெடுத்து இருக்கிறார் சாய்பல்லவி..

ராவணன் கேரக்டரில் மிரட்டி இருக்கிறார் கேஜிஎப் நாயகன் யாஷ்.. இந்த ராமாயணம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் யாஷ் கேரக்டர் இன்னும் பலம் பெறும் என்று நம்பலாம்..

லட்சுமணனாக ரவி துபே, ராவணன் மனைவியாக காஜல் அகர்வால், தங்கையாக ரகுல் ப்ரீத் சிங், கைகேயியாக லாரா தத்தா.. ராவணன் அன்னையாக ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பங்கஜ் குமார், ரமேஷ் லிமயி ஆகியோரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கொள்ளை அழகு கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் கூடுதல் அழகை காட்டி உள்ளது..

ரகுமானுடன் இணைந்து ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்திருக்கிறார்.. இருவரும் இசையில் மிரட்டி இருக்கின்றனர்..

‘ராமாயணா’ படத்தில் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு (2027) தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது..

இயக்குனர் நிதேஷ் திவாரி.. இந்தியர்கள் அனைவருக்கும் அறிமுகமான கதையாக இருந்தாலும் அதை திரைக்கதைவில் வடிவில் கொடுத்து பிரம்மாண்டமாக காட்டி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார்.. சில காட்சிகளில் 3டிகள் பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது..