சீன் விமர்சனம் 4.5/5.. சூர்யாவின் அதிரடி பெர்பார்மன்ஸ்
சைபர் கிரைம் போலீசில் வேலை பார்க்கிறார் சூர்யா… ஒரு கட்டத்தில் இவருக்கு கண் பார்வை மெல்ல மெல்ல குறைந்து வரவே வேலையை விட நினைக்கிறார்… ஆனால் தன் கண் பார்வை தான் காரணம் என்று தெரியக்கூடாது என பல பிரச்சினைகளை தான் பணிபுரியும் துறைக்கே கொடுக்கிறார்..
ஆனாலும் இவரின் திறமையால் இவரை வேலையில் விட்டு பணி நீக்கம் செய்யாமல் இருக்கிறார் லால்… ஒரு கட்டத்தில் இவர் சிறை பிடித்த சைக்கோ கில்லர் பாணியில் மீண்டும் வெளியில் கொலைகள் நடக்கிறது…
அப்படி என்றால் அந்த கொலைகாரன் யார் என்பதை தேட நினைக்கிறார். ஆனால் இவரின் கண் பார்வை முழுவதுமாக மறைந்து விட்ட நிலையில் அந்த குற்றவாளியை கண்டுபிடித்தாரா சூர்யா.? என்பதெல்லாம் வித்தியாசமான கதை..
நடிகர்கள்…
மாஸ் காட்டி மிரட்டும் ஹீரோக்கள் மத்தியில் கதைக்கு என்ன தேவையே அதை உணர்ந்து இன்பராஜ் கேரக்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சூர்யா.. கண்பார்வை முழுவதும் மறைந்து விடும் என்று நினைக்கையில் அவர் அதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அற்புதம்..
நஸ்ரியா வந்த பிறகு கதையின் வேகம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.. சூர்யா நஸ்ரியா அழகான ரொமான்ஸ் இருந்தாலும் ஒரு காட்சியில் கூட டச் இல்லை…
மலையாள நடிகர் நஸ்லென் வில்லன் வேடத்தில் கலக்கி இருக்கிறார் சென்னைக்கு அவர் ரூட் கேட்கும் போது அவர் அவர் மீதான எதிர்பார்ப்பு உண்டாகிறது.. வில்லனாக வெரைட்டி நடிப்பை கொடுத்திருக்கிறார்..
சூர்யாவின் அப்பாவாக ஆனந்தராஜ் காமெடியும் செய்து கலக்கியிருக்கிறார்.. நஸ்ரியாவின் அப்பாவாக கஜராஜ் அலட்டிக் கொள்ளாத நடிப்பை கொடுத்திருக்கிறார்..
டோவினோ தாமஸ் மற்றும் லால் ஆகியோரும் உண்டு. லால் சில இடங்களில் ஓவர ஆக்டிங்.. ராஜ் பிரியன் உள்ளிட்டோரும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்..
தொழில்நுட்ப குழு…
வினித் அகஸ்தியன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. காட்சிகளை கலர்ஃபுல்லாக்கி இருக்கிறார்.. சூர்யாவின் வீட்டை அழகாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர்.
சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார் ஏரோபிளேன் பாடல் ரசிக்க வைக்கிறது.. நஸ்ரியாவின் ஆக்சன் பாட்டும் சூப்பர் ரகம். பாடல்களை விட பின்னணி இசை தெறிக்க விட்டுள்ளார்..
சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக சக்திவேலன் வெளியீட்டு உரிமை கைப்பற்றி இருக்கிறார்… படத்தை சிறப்பாக ப்ரமோஷன் செய்து இருக்கிறார்..
மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கியிருக்கிறார்.. சில இடங்களில் நம்ப முடியாத லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கதையின் போக்கை புரிந்து அதற்கு ஏற்ப ரசிக்க முடிகிறது.. 2026 ஆம் ஆண்டில் சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறார் ஜீத்து மாதவன்..
வித்தியாசமான திரைக்கதை அமைத்து தமிழக ரசிகர்களுக்கு சூர்யாவின் மூலம் தீபாவளி விருந்து கொடுத்திருக்கிறார்
