திரை விமர்சனம்

ENEMY OF THE SMUGGLER- விமர்சனம் 4/5..

கதை….

அப்பாவை இழந்த சரண் தன் தாய் ராதிகாவுடன் வசித்து வருகிறார்.. ஏற்கனவே குடும்பத்தில் கடன் பிரச்சினை அதிகமாக இருப்பதால் குறுக்குவழியில் அதிக பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.. இவருக்கு துணையாக இருக்கிறார் போலீஸ் இன்பார்மர் பால சரவணன்..

கடல் வழியாக இந்தியாவிற்கு வரும் ஹெராயன் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி அதன் மூலம் கோடி கணக்கில் சம்பாதிக்க திட்டமிடுகிறார் சரண்.. ஏற்கனவே இந்த தொழிலில் உலக அளவில் கொடிகட்டி பறக்கும் லால் மற்றும் ஜே.டி. சக்கரவர்த்தியிடம் இவர்களின் திட்டம் பலித்ததா.?

இவர்களின் சதி திட்டத்தை அறிந்த போலீஸ் சமய முரளி அவர் ஒரு திட்டம் போடுகிறார்.. இறுதியில் என்ன ஆனது.?

இந்த சதி திட்டத்தில் சிக்கியவர் யார்.? மீண்டது யார்..? என்பதெல்லாம் யூகிக்க முடியாத அதிரடியான சம்பவம்..

நடிகர்கள்…

வடசென்னை படத்தில் ஐஸ்வர்யாவின் சகோதரனாக நடித்த சரண் இதில் கதை நாயகன்.. ஆக்ஷன் காதல் என இரண்டிலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.. மனைவிக்கு கட்டுப்பட்டாலும் கடத்தலில் கெத்து காட்டி இருக்கிறார்..

வழக்கமாக நாயகனின் நண்பனாக பால சரவணன்.. சீரியஸ் படத்தில் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கிறார்..

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜே.டி. சக்கரவர்த்தி வில்லனாக மிரட்டி இருக்கிறார்.. இவரின் கண்கள் கூட மிரட்டச் செய்யும்.. கடத்தலாக இருந்தாலும் அதில் தொழில் தர்மம் காக்கும் இவரின் நேர்மை சிறப்பு..

நாயகியாக ஷிமேகா.. காதலியாக பெரிய வேலை இல்லை என்றாலும் மனைவியாக வந்தபின் கனமான பாத்திரத்தில் கவர்கிறார்..

இன்டர்நேஷனல் கடத்தல் கும்பல் தலைவனாக லால்.. மாஸ் காட்டி இருக்கிறார்.. சரணின் அம்மாவாக ராதிகா கொடுத்த பாத்திரத்தில் பக்கா பொருத்தம்..

ஜாபர் சாதிக் மற்றும் காளி வெங்கட் கதாபாத்திரங்கள் கட்சிதமான தேர்வு..

தொழில்நுட்ப குழு…

சாம் டேனியல் இசையில் தங்கம் தங்கம் பாடல் கவர்கிறது.. கவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. துறைமுகத்தில் கண்டெய்னர்கள் வந்து செல்லும் பாதை அதன் வழியாக நடக்கும் கடத்தல்.. கப்பல் கண்டெய்னர்கள் என பிரம்மாண்டத்தைக் காட்டி நம்மை துறைமுகத்தில் சென்று வந்த உணர்வை காட்சிகளில் ஏற்படுத்தி இருக்கிறார்..

₹ 5,000 கோடி போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்கக் களமிறங்குகிறார் போலீஸ் சமய முரளி

ஐ ஆர் எஸ் ஆபிசர் இவர்… இவரே படத்தை இயக்கி தயாரித்து நடித்திருக்கிறார்.. இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும் நம்மால் நம்ப முடியவில்லை.. மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார்.. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக காட்சிகளை அமைத்து இந்த படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் சமய முரளி.. இவரை பின்னணி இசையமைத்து படத்திற்கு திரில்லர் எஃபெக்ட் கொடுத்திருக்கிறார்..

கடல் வழியாக வரும் போதைப் பொருட்கள் உள்ளிட்டவர்களை பல படங்களில் பார்த்திருந்தாலும் CUSTOMS அலுவலகத்தில் நடக்கும் தில்லுமுல்லுகள் அதற்கு பின்னணியில் உள்ள அரசியல் என அனைத்தையும் அலசி இருக்கிறார் இயக்குனர்..

இவர் ஒரு ஆபிசர் என்பதால் அதனின் பல நுட்பங்களை திறம்பட செய்திருக்கிறார்.. ஒரு கேங்ஸ்டர்.. அங்கு வேலை செய்யும் நபர்கள் அவர்களுக்கு பின்னணியில் காதல் என அனைத்தையும் சிறப்பாக கலந்து கொடுத்து இருக்கிறார்.. ஆனால் எந்த விதத்திலும் இதில் அரசியல்வாதிகளில் நுழையாமல் கவனமாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் சமய முரளி…