பனி விழும் இரவு விமர்சனம்… 3/5
கதை …
கொடைக்கானலில் இருக்கும் தன் மனைவியின் பங்களாவுக்கு வருகிறார் நாயகன் அருண் கார்த்திக்.. அடுத்த நாளே தன் மனைவியை காணவில்லை.. சிலர் தன்னை அடித்து மனைவியை கடத்தி விட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்..
இதனையடுத்து அந்த பங்களா செக்யூரிட்டி அக்கம் பக்கத்தினர் என அனைவரிடம் விசாரிக்கிறார் போலீஸ் சேரன் ராஜ் மற்றும் கருப்பு நம்பியார்..
ஆனால் அந்த செக்யூரிட்டி உள்ளிட்ட அனைவரும் அவர் மட்டும்தான் வந்தார்.. அப்படி ஒரு பெண்ணை நாங்கள் பார்க்கவில்லை என்கின்றனர்..
அப்படி என்றால் அவர் சொல்லும் அந்த பெண் யார்.? அவர் எங்கு சென்றார் என்பதை எல்லாம் யூகிக்க முடியாதபடி கற்பனை கலந்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்..
நடிகர்கள்…
ஒரு நொடி படத்தில் முக்கிய கேரக்டர் நடித்த அருண் கார்த்திக் இந்த படத்தின் கதை நாயகன்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் கவர்கிறார்.. நாயகியாக எனாக்ஷி கங்குலி.. கொஞ்ச நேரமே வந்து செல்கிறார்..
போலீஸ் சேரன் ராஜ் மற்றும் கருப்பு நம்பியார் இருவரும் நடிப்பில் ஓகே..
இவர்களுடன் சரவணசக்தி செக்யூரிட்டி கதாபாத்திரத்திலும், செ.ரா. ராஜேஷ் சோலை ராஜாகவும், கஜராஜ் டாக்டராகவும் நடித்துள்ளனர். மேலும் சுருளி, உமர், வினோத் ஆகியோரும் உண்டு..
தொழில்நுட்ப குழு…
ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. கொடைக்கானல் அழகை இன்னும் தாராளமாக காட்டி இருக்கலாம்..
சதா முருகன் இசையமைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். சந்தோஷ் ஆறுமுகம் என்பவரும் பாடல்களை எழுதியுள்ளார்.. பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம்தான்..
சதா முருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கதையை எழுதி, திரைக்கதை மற்றும் வசனங்களை அமைத்து, படத்தை இயக்கியுள்ளார் செ.ரா. ராஜேஷ்.
கிளைமாக்ஸ்-இல் எதிர்பாராத திருப்பத்தை வைத்திருக்கிறார்.. முக்கியமாக இன்று அதிகம் பேசப்படும் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வித்தியாசமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் செ.ரா. ராஜேஷ்.
Pani Vizhum Iravu movie review
