திரை விமர்சனம்

சிங்காரம் விமர்சனம்… 3.5/5..

கதை…

எம் எஸ் பாஸ்கர் – தீபா இருவரும் தம்பதிகள்.. இவர்களின் மூத்த மகன் யோகி பாபு.. இவர்களுடன் ஜாவா சுந்தரேசன், கனேஷ்கர், கல்கி, மனோபாலா ஆகியோரும் உண்டு.. இவர்கள் குறவர் – குறத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள்..

ஆனைமலை என்ற பகுதியில் இவர்கள் கூடாரம் அமைத்து அங்கு வசித்து வருகின்றனர்.. இவர்களின் கூட்டத்தில் இருக்கும் பெண்கள் மீது காம ஆசை கொள்கிறார் எம்எல்ஏ தம்பி சென்ட்ராயன்.. ஒரு கட்டத்தில் இரவில் வந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்.

இதனால் அவர்களை கட்டி வைத்து அவமானப்படுத்துகிறார் யோகி பாபு.. இதனால் இருவருக்கும் பிரச்சனை வெடிக்கிறது..

அதன் பிறகு என்ன நடந்தது.? எம்எல்ஏ தன் அதிகாரத்தால் இவர்களை என்ன செய்தார்.? ஏற்கனவே நிரந்தர இடம் இல்லாமல் வாழும் இவர்களின் நிலை என்ன ஆனது.? என்பதெல்லாம் நீதிக்கதை..

நடிகர்கள்…

கதை நாயகனாக யோகி பாபு.. இடைவேளை வரை குறவர் என மகனாகவும் இடைவேளைக்குப் பிறகு கோடீஸ்வரனாகவும் கேரக்டரில் மின்னுகிறார் யோகி பாபு..

எந்த கேரக்டர் என்றாலும் அந்த கேரக்டராகவே மாறி அர்ப்பணிப்பை கொடுப்பவர் எம்எஸ் பாஸ்கர்.. இதிலும் குறை இல்லை.. படம் 1990களில் நடப்பதால் லாட்டரி சீட்டு மோகத்தில் சிக்கியவராக எம்எஸ் பாஸ்கர் வாழ்ந்திருக்கிறார்..

இவர்களுடன் நல்லசிவம் கேரக்டரில் வேலராமமூர்த்தி, லாட்டரி சீட்டு விற்பவராக இளவரசு, அரசியல்வாதிகளாக படவா கோபி & மாரிமுத்து, எம்எல்ஏவின் தம்பியாக சென்ட்ராயன் உள்ளிட்டோரும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்..

முக்கியமாக வில்லத்தனத்தில் சென்றாயன் கலக்கி இருக்கிறார்.. அவரது உடல் மொழி கிராமத்து (பொறுக்கி) இளைஞனுக்கு பக்கா பொருத்தம்..

தொழில்நுட்பக் குழு…

இசை மற்றும் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது..

பிறப்பால் எவரும் தாழ்ந்தவர் கிடையாது.. ஆனால் மனிதன் உருவாக்கிய ஜாதி மதம் மட்டுமே இவர்களை பிரித்து ஆள்கிறது.. ஆனால் ஒருவனின் வாழ்க்கை தரத்தை அதிகாரமும் பணமும் முடிவு செய்யும்..

கீழ் சாதிக்காரன் அதிகாரத்திற்கு வந்தால் அனைத்தும் சாத்தியமாகும்.. அவர்களின் வாழ்வில் விடியல் பிறக்கும் என யோகி பாபு கேரக்டர் மூலம் குறவன் இனத்திற்கு மகுடம் சூட்டி இருக்கிறார் இயக்குனர் கதிர்வேலு..